Friday, January 26, 2018

பார்த்திபனூர் அருகில் இருக்கும் அருங்குளத்திலிருந்து புறப்பட்டு மேனாடு வந்த கருப்பர் தங்கியது "அரியாச்சிகாடு " தரி கொண்டார் பொன்னாகுளம் வீரமாகாளியிடம் . அந்த வீரா மாகாளி சொன்னது உங்களுக்கு தங்க இடம் போதாது என்று சக்கந்தி மானாகுடி சமமான மட்டாகுளம் பில்லத்தி கண்மாயும் கனத்ததொரு மேல்கரையும் சுற்றி திருமதுவும் சூழ்ந்த தலவாசலும் அங்கே ஒரு மருதாருடைய அய்யனார் கோவிலுண்டு அய்யனிடம் கேட்டால் தங்க வசதியுண்டு என்று அந்த வீரமாகாளி சொன்னது சொன்ன பிரகாரம் அருங்குளத்திலிருந்து வந்த கருப்பையா முத்துராக்கு அய்யனார் கோவில் அருகே ஈச்சப் பண்ணையில் தங்கினார்கள். தங்கி இருக்கும் வேளையில் மருதாருடைய அய்யனாருக்கு பூஜை செய்து வந்த பூசாரி ராமவேளார் மூலம் இடம் கேட்டார்கள். அய்யனாரிடம் முறையிட்டு கேட்டவுடன் உங்களுக்கு இடம் இல்லை என்று அய்யன் சொல்லி விட்டார். ' அதன் பிறகு மனமுடைந்து மாயன் இருக்கும் இடம் அழகர் கோவிலுக்கு சென்றார்கள் அங்கும் இடம் இல்லை என்று சொன்னார்கள். சொன்னவுடன் மறுபடியும் கருப்பையா முத்துராக்கு பூஜை செய்து வந்த பூசாரி ராம வேளாரிடம் இடம் கேட்கும் வேளையிலே மருதாருடைய அய்யனாரிடம் பூசாரி அடி பணிந்து அருந்தவம் செய்து இடம் கேட்டுக்கொண்டார். அதன்படி மருதாருடைய அய்யனாருக்கு முன் பூஜையும் கருப்பையா முத்துராக்கு அம்மனுக்கு பின் பூஜையும் என்று உறுதி வாங்கி கொண்டு மானாகுடி பில்லத்தி கண்மாக்கரையில் கருக்குவாச்சி கூகை முத்தி பண்ணையிலே சாய்ந்திருந்த சந்தன் வேளாவில் அமர்ந்தார் . அமர்ந்தவுடனே பக்தன் ஒருவனுக்கு "மாட்டுத் தலையை மான் தலயாக்கி எல்லுப் பொதியை கொல்லுப் பொதியாக்கி கொடுத்தார். மிகவும் பழமை வாய்ந்த புராதனக் கோவில்